tamilnadu

img

பேரவை தற்காலிக தலைவராக கு.பிச்சாண்டி பதவி ஏற்பு....

சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கு.பிச் சாண்டி பதவி ஏற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்  தலைமையிலான தமிழக புதிய அமைச்சரவை மே 7 அன்று பதவியேற்றுக் கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12 ஆம் தேதி பேரவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் படவுள்ளனர்.இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத் தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியைத் தற்காலிக தலைவராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மே 8 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.கடந்த 1989, 1996, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டப்பேரவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் கு.பிச்சாண்டி.

புதிதாக உருவாக்கப்பட்ட கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தும் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.மூத்த உறுப்பினரான அவர் தற்காலிக தலைவராக  நியமிக்கப்பட்டது டர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “ஆளுநர், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக நியமித்தார்.அதன்படி,  திங்களன்று (மே 10) காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச் சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, க.பொன்முடி  உள்ளிட் டோர் உடனிருந்தனர்.தற்காலிக சபாநாயகராகப் பதவியேற்ற கு.பிச்சாண்டி, தமிழக சட்டப்பேரவை  உறுப்பினர்கள் 234 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.