tamilnadu

தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கண்டனம்

சென்னை, ஏப். 18- வாக்காளர் பட்டியலில் நீதிபதி பெயர் இல்லை என்பதால் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். சென்னை சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஜெயந்தி பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்தார். வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லாததால் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி ஜெயந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.