லக்னோ:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத் வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுரேந்திர குமார் யாதவுக்கு, உத்தரப்பிரதேச பாஜக அரசு, ‘மாநில லோக் ஆயுக்தா’ துணைத் தலைவர் பதவி வழங்கியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ஆம் ஆண்டு,டிசம்பர் 6-ஆம் தேதி சங்-பரிவாரக் கூட் டத்தால் இடித்துத் தள்ளப்பட்டது.
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியஇந்த சம்பவத்தில், மசூதி இடிப்பிற்கு தூண்டுதலாக இருந்ததாகவும், மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டியதாகவும் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட49 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்து விட்டநிலையில், எஞ்சிய 32 பேர் மீது மட்டும், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக, அயோத்தியின் உளவுத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையை சிபிஐ சமர்ப்பித்திருந்தது.
ஆனால், கடந்த 2020 செப்டம்பர் 30 அன்று இவ்வழக்கில் சுமார் 2,300 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை வழங்கிய சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், உளவுத்துறையின் அறிக் கையை ஆதாரமாக ஏற்க மறுத்து, அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். கரசேவகர்களுக்குள் ஊடுருவியஅடையாளம் தெரியாத சமூக விரோதிகளால்தான் மசூதி இடிக்கப்பட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். அன்றைய தினமே அவர் பணி ஓய்வும் பெற்றார்.எனினும் நீதிபதி சுரேந்திர குமார் யாதவின் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தன.அவர் நடுநிலையான தீர்ப்பை வழங்கவில்லை என விமர்சனங்கள் வைக்கப்பட்டன.இந்நிலையில்தான், மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உட்பட சங்-பரிவாரத்தைச் சேர்ந்த 32 பேரையும் விடுதலை செய்த நீதிபதி சுரேந்திர குமார் யாதவை,உத்தரப் பிரதேச லோக் ஆயுக்தா துணைத்தலைவர்களில் ஒருவராக நியமித்து மாநில பாஜக அரசு, பதவி வழங்கி கவுரவித்துள்ளது. அவரும் திங்களன்று அப்பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
சுரேந்திர குமார் யாதவ், அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் அந்த பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்ஹிந்துக்களுக்குச் சொந்தம் என்றும்,அங்கு ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய், மத்திய பாஜக அரசால் மாநிலங்களவை நியமன எம்.பி. ஆக்கப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.