சென்னை:
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் மறைவுக்கு தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளது.திசைகள் இதழில் தன் எழுத்துப் பணியைத் தொடங்கி,பிறகு குமுதம், விகடன், ஜூனியர் விகடன், தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ், ஜெயா, விஜய், ராஜ் தொலைக் காட்சிகளிலும் பணியாற்றினார்.
1986 ஆம் ஆண்டு கிராமப்புற பிரச்சனைகளை செய்தியாக்கியதற்காக கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றார். 1968 ல் நடைபெற்ற வெண்மணி படுகொலை நினைவு நாளில் அது குறித்த கட்டுரை எழுதியுள்ளார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள குறிப்பில், “40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந் தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சங்க (டி.யு.ஜெ) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.