சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழகம் கூட்டுப்பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும். விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும். அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் 4 மாவட்ட கல்லூரிகளை இணைக்கும் திட்டம் உள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்ட கல்லூரிகளை இணைக்கும் திட்டம் உள்ளது. கல்வித்துறையின் நிதிநிலையை பொறுத்து அண்ணாமலை பல்கலைக்கழ கத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெறு கிறது.
பெயரளவு தொடங்கப்பட்ட ஜெ. பல்கலைக்கழகம் தனித்து செயல்பட முடியாது. முன்னாள் தாலுகா அலுவலகத்தில்தான் தற்போது ஒரு பெயர்ப் பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஜெ.சட்டப்பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்ததை தவிர நிதி ஒதுக்கீடோ வேறு ஏற்பாடோ செய்யப்படவில்லை. ஜெ.சட்டப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். ஜெ.பல்கலைக்கழகத்துக்கு பதிவாளரோ, வேறு அதிகாரிகளோ நியமிக்கப்படவில்லை. ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.