tamilnadu

img

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்: 22, 500 கொசுக்களிடம் ஆய்வு

சென்னை:
தமிழகத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, கியூலக்ஸ் இன கொசுக்களைப் பிடித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வரு கின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங் களில் மழைபெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நோய்த் தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.இதில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலை தமிழகத்தில் வரவிடாமல் தடுக்க, நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மழை பெய்து  புல்வெளியில் படர்ந்த நன்னீரில் உற்பத்தியாகும் கியூலக்ஸ் கொசுக்கள் கடிப்பதால் உருவாகும் கொடிய நோய் தான் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்.

வெளிநாட்டுப் பறவைகளையும், பன்றிகள் மற்றும் மாடுகளையும் கடிக்கின்ற கியூலக்ஸ் கொசுவுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்றும், அவை ஒரு மனிதரைக்கடித்தால் அவருக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், மதுரை, விருதுநகர், கரூர் ஆகிய 14 மாவட்டங்களில் இருந்து 22,500 கியூலெக்ஸ் கொசுக்களைப் பிடித்து பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர். இதில் 5 கொசுக்களில், ஜப்பானிய மூளைக்காய்ச்சலை பரப்பும் ரத்தமாதிரிகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூரில் 3, வேலூரில் ஒன்று, கள்ளக்குறிச்சியில் ஒன்று இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கியூலக்ஸ் கொசுக்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணிமுதல் 8 மணி வரை மட்டுமே மனிதர்களைக் கடிக்கும் தன்மை உடையவை. நோய்எதிர்ப்பு சக்தி குறைவான 15 வயதுக்குட் பட்ட சிறுவர்களை இந்த கொசுக்கள் கடித்தால் ஜப்பானிய மூளைகாய்ச்சல் எளிதில் தாக்கும் என்று எச்சரிக்கின்றனர்.ஒருவரை ஜப்பானிய மூளைகாய்ச்சல் தாக்கினால், உடலில் ஆரம்ப கட்டத்தி லேயே 110ல் இருந்து 120 டிகிரி வரை உச்சபட்ச காய்ச்சல் இருக்கும், அவர்களின் கண்கள் சிவப்பாக மாறும், கழுத்து நிலையாக நில்லாமல் நடுங்கிக் கொண்டே இருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக நினைவாற்றல் மங்கி, சுய நினைவை இழக்கவைக்கும், தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக இருந்தால் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.