ஜாக்டோ-ஜியோ போராட்டம்
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர், செவ்வாயன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் (நவ.18) செவ்வாயன்று நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுரேஷ்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எல்.ஆனந்தகிருஷ்ணன்,தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்கே.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசினர்.
