வெயிலின் தாக்கத்தால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்கள் அக்னி நட்சத்திரம் நீடிக்கும். வருகிற 24 ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெப்ப நிலை அதிகரித்து சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அத்துடன் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலை இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.