ரத்து செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிக ளுக்கு உரிய விசாரணை நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும் என சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நடைபாதை வியா பாரிகளுக்கு சென்னை மாநகராட்சி மூலம் புதிய அடையாள அட்டை டிசம்பர் 3ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரு கிறது. இதுவரை வாங்காத வர்கள் பிப். 28க்குள் பெற்று கொள்ளுமாறு மாநக ராட்சியால் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் மண்ட லம் 5க்கு உட்பட்ட எம்.சி. ரோடு ஜி.ஏ. ரோடு பகுதி யில் வியாபாரம் செய்யும் 200க்கும் மேற்பட்ட நடை பாதை வியாபாரிகளின் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே உடனடியாக விசாரித்து வியாபாரிக ளுக்கு புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும், அந்த பகுதியில் வியாபாரம் செய்யும் நடைபாதை வியா பாரிகளின் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி பணிகள் நிறைவடைந்த வுடன் மாநகராட்சி ஆணை யர் அறிவுறுத்தியதின் அடிப்படையில் அந்த பகுதியில் ஆய்வு செய்து, அவர்கள் ஏற்கெனவே வியாபாரம் செய்த இடத்தையே ஒதுக்கீடு செய்து தருமாறும் ஆணை யர் குமரகுருபனை சந்தித்து சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், நகர விற்பனை குழு உறுப்பினர்கள் கே. பலராமன், ஜி.மோனிஷா, மாநகராட்சி வணிக வளாகம் சங்கத்தின் தலைவர் கே.செல்வானந்தன், துணைச் செயலாளர் மாரி, எம்.சி.ரோடு, ஜி.ஏ ரோடு நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பாக்கியலட்சுமி, நிர்வாகி கள் மணிமேகலை, சிவ காமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.