சென்னை:
தமிழக அரசு நியமித்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று (மே 26) ஆலோசனை நடத்தவுள்ளார்.கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், சிகிச்சைக்கான நெறிமுறைகளை வகுக்கவும் 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவைத் தமிழக அரசு அமைத் தது. இந்தக் குழுவினருடன் செவ்வாய் பகல் 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில்,அதன் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கை, கட்டுப்பாடு தளர்வுகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்ப டுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.மே மாதம் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை கேட்பதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.