புதுதில்லி:
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு ரூ. 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங் களை வெளியிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், ராணுவம், அணுசக்தி, விண்வெளி என அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு திறந்து விடப் போகிறோம்; பொதுத்துறை நிறுவனங்களின் 100 சதவிகித பங்குகளையும் தனியார் முதலாளிகளுக்கு விற்க முடிவு செய்திருக்கிறோம் என்று அறிவித்துள்ளார்.
“நிதியமைச்சர் அறிவித்த இந்த சலுகைகள், சீர்திருத்தங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும்.. பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவும்.. கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும்.. மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும்” என்று பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம்காணொலி மூலம் ஊடகங்களுக்கு விரிவான பேட்டிஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசுஅறிவித்த திட்டங்களின் மதிப்பு காங்கிரஸ் கட்சியின் பார்வையில் ரூ. 1 லட்சத்து 86 ஆயிரம் கோடிதான். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.91 சதவிகிதம் மட்டும்தான்.
மத்திய அரசு அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து பல்வேறு பொருளாதார ஆய்வாளர்களும், ரேட்டிங் நிறுவனங்களும், வங்கிகளும், நிதித்தொகுப்பு 0.8 சதவிகிதம் முதல் 1.5 சதவிகிதம் மட்டுமே என மதிப்பிடுகின்றனஇதனிடையே, மத்திய அரசு சந்தர்ப்பவாதமாக செயல்பட்டு சீர்திருத்தங்களை புகுத்த முயல்கிறது.சீர்திருத்தம் செய்யும் துறையோடு தொடர்புள்ளவர் களிடம் ஆலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் சட்டவரைவு கொண்டுவராமல், விவாதிக்காமல் மத்திய அரசு அறிவிக்கிறது.
திட்டமிட்டே நாடாளுமன்றத்தை புறக்கணித்துவிட்டு மத்திய அரசு சீர்திருத்தங்களை தன்னிச்சையாக செய்ய முயல்கிறது, நிதித்தொகுப்பு குறித்துநாடாளுமன்றக் குழுவிடம்கூட ஆலோசிக்கவில்லை.உண்மையாகவே, ஆக்கப்பூர்வமான சீர்திருத்தமாக இருந்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாக இருந்தால், அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். ஆனால் அரசு சந்தர்ப்பவாதியாக இருக்கிறது. இதை நாங்கள் நாடாளுமன்றத்தில்கடுமையாக எதிர்ப்போம், சவால் விடுவோம்.ஒருவர் கருத்தில் உதித்ததை அல்லது ஒரு குழுவினர் கருத்தில் உருவாகும் சிந்தனையே சரிஎன முடிவு செய்து ஆலோசிக்காமல், விளைவுகளை அறியாமல் மத்திய அரசு அறிவிக்கிறது என பல்வேறு நாளேடுகளும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளன.எல்லோரையும் எல்லா நேரத்திலும் முட்டாள் களாக்க முடியாது. மத்திய அரசு அறிவித்த நிதித்தொகுப்பு போது
மானதாக இல்லை. இந்த நிதித்தொகுப்பு நாட்டில் அடிமட்டத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், நிலமில்லாத விவசாயக் கூலிகள், தினக்கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டு வேலை இழந்துள்ளவர்கள் என 13 கோடிகுடும்பத்தினரை பற்றி சிந்திக்காமல் அறிவிக்கப் பட்டிருப்பது வேதனையளிப்பதாக இருக்கிறது.
சுய தொழில் புரிவோர், சிறிய கடை வைத்திருப்போர், கீழ்நடுத்தர குடும்பத்தினர், பணமில்லாமல்கடன் வாங்கி செலவும் செய்யும் மக்கள், 5.8 கோடிசிறு, நடுத்தர நிறுவனங்கள் என அனைவரும் பொருளாதார நிதித்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.மத்திய அரசு அறிவித்த பொருளாதார தொகுப்பின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 86 ஆயிரம் கோடிதான். மற்றவை எல்லாம் பட்ஜெட்டில் ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டவை. சில நீண்டகாலத் திட்டங்களின் செலவுகள் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன.இதைத்தாண்டி கூடுதலாக மத்திய அரசு செலவு செய்யாமல் பொருளாதார வளர்ச்சியை உந்தித்தள்ள முடியாது. இந்த செலவுகள் நிதியமைச்சர் மூலம் ஏற்கப்பட்டதுதான். உண்மையை நீண்டகாலத்துக்கு மறைக்க முடியாது.ரேட்டிங் ஏஜென்சிகள் நாட்டின் மதிப்பை குறைத்துவிடும் என்று அஞ்சி மத்திய அரசு செலவழிக்காமல் இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை நான் நம்பவில்லை. ஏனென்றால், நாட்டை ரேட்டிங் ஏஜென்சிகள் நிர்வாகம் செய்யவில்லை.நான் ஏற்கெனவே கூறியதுபோல், நாட்டின் நிதிப்பற்றாக்குறை பற்றி மத்திய அரசு கவலைப்படவேண்டாம். கூடுதலாக 10 லட்சம் கோடி ரூபாய், அதாவது ஜிடிபியில் 10 சதவிகிதம் இருக்கும் வகையில் செலவு செய்தால்தான் பொருளாதாரம் மீளும்.இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.