tamilnadu

img

மண் சாலை அமைத்ததில் முறைகேடா?

திருவொற்றியூர், டிச. 27- எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை உடனே வழங்கக் கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  எண்ணூர் அனல்மின் நிலையம் சுமார்  45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதில் 5 அலகுகளுடன்  420 மெகாவாட் மின்  உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப் பட்டது. இந்நிலையில்  பல்வேறு காரணங்க ளால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  இந்த அனல்மின் நிலையம்  நிரந்தரமாக மூடப்பட்டது. இங்கு பணியாற்றிய 470 ஊழி யர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு வட சென்னை அனல்மின் நிலையம்  அலகு1,  2 ஆகிய பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டனர். இடமாறுதல் பெற்றாலும் இவர்க ளுக்கான ஊதியம் மற்றும் பணப்பயன்கள் எண்ணூர் அனல் மின் நிலையத்திலேயே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆண்டு தோறும் வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பயன்கள் வழங்காமல் நிலுவையில் உள்ளது. தலைமை அலுவலகத்திலிருந்து எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு நிதி  வராததே இதற்கு காரணம் என்று கூறப்படு கிறது. எனவே உடனடியாக பணப்பயன் களை வழங்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்  டம் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு செயலாளர்  வெங்கடய்யா, டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் ஆனந்தன், தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு  கிளைத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.