tamilnadu

img

மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு: சிவந்தது சென்னை! - முதலமைச்சர் ஸ்டாலின்

மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால், சிவந்தது சென்னை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மாமேதை கார்ல் மார்க்ஸின் பிரமாண்ட வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்றுமில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது" என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது!
நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.