tamilnadu

img

ஜனநாயகப் படுகொலைக்காக சூழ்ச்சி வலை பின்னும் மோடி அரசு! நாடாளுமன்ற முடக்கத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்!

ஜனநாயகப் படுகொலைக்காக சூழ்ச்சி வலை பின்னும் மோடி அரசு!  நாடாளுமன்ற முடக்கத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்! 

புதுதில்லி  இந்திய ஜனநாயகத்தின் உயரிய அடையாளமாக விளங்கும் நாடாளுமன்றம், தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. மக்கள் நலன்,  தேசப் பாதுகாப்பு மற்றும் பொருளா தாரக் கொள்கைகள் குறித்து விவா திக்க வேண்டிய அவை, இன்று ஆளுங்கட்சியின் அடக்குமுறை நட வடிக்கைகளால் முடங்கிக் கிடக் கிறது. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி மற்றும் இடது சாரி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்குப் பதில் சொல்லத் துணி வில்லாத மோடி அரசு, ‘சஸ்பென்ட்’ மற்றும் ‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என்ற புதிய நாடகங்களை அரங்கேற்றி ஜன நாயகக் குரல்வளையை நசுக்கி வரு கிறது.  ஜெனரல் நரவனே புத்தகமும், மௌனம் காக்கும் தேசபக்தியும்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்தே, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய (இன்னும் முழுமையாக வெளியிடப்படாத) புத்தகத்தின் விவரங்கள் பெரும் விவா தப் பொருளாகியுள்ளன. அந்தப் புத்தகத்தில், 2020-ஆம் ஆண்டு கை லாஷ் மலைப் பகுதியில் சீன ராணு வம் இந்திய எல்லைக்குள் ஊடுரு வியபோது நிலவிய அசாதாரண சூழல் விவரிக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவத்தினர், சீன டாங்குகள் முன்னேறி வருவதைக் கண்டு, அதைத்  தடுக்கத் தாக்குதல் நடத்த அனுமதி கோரியபோது, தில்லியில் இருந்த அதி கார மையங்கள் சுமார் இரண்டரை மணி நேரம் மௌனம் காத்தன என்பதுதான் ராகுல் காந்தி முன்வைத்த பிரதானக் குற்றச்சாட்டு. “நாட்டின் எல்லை அபா யத்தில் இருந்தபோது, பிரதமர் மோடியும் பாதுகாப்பு அமைச்சரும் ஏன் முடிவெடுக்கத் தயங்கினார்கள்?” என்ற கேள்வியை ராகுல் காந்தி எழுப்பி யவுடன் ஆளுங்கட்சி தரப்பில் கடும் பதற்றம் உருவானது. தேசபக்தி பற்றிப் பேசும் பாஜக அரசு, ராணுவத் தளபதி யின் இத்தகைய விமர்சனத்திற்குப் பதில் சொல்லாமல், அந்தப் புத்த கத்தைப் பற்றியே பேசக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுவது அவர்களின் பலவீனத்தையே வெளிச்சமிட்டுக் காட்டியது.  “பாதுகாப்பு அச்சுறுத்தல்” - சபாநாயகர் பின்னால் ஒளிந்துகொள்ளும் பிரதமர்?  நாடாளுமன்ற வரலாற்றில் இது வரை கண்டிராத ஒரு புதிய திருப்ப மாக, பிப்ரவரி 5 வியாழனன்று, குடியர சுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங் களுக்கு பதிலுரை வழங்க பிரதமர் மோடி மக்களவைக்கு வராததற்குச் சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு விசித்திர மான விளக்கத்தை அளித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.,க்கள் பிரதமரின் இருக்கை அருகே சென்று “முன்னெப் போதும் இல்லாத ஒரு அசம்பாவித த்தை” (unprecedented incident) நிகழ்த்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்கு நம்பகமான தகவல் கிடைத்த தால், பிரதமரைச் சபைக்கு வரவேண் டாம் என்று தாமே கேட்டுக்கொண்ட தாகச் சபாநாயகர் கூறியுள்ளார். இந்தச் செயல் நாட்டின் ஜனநாயக மரபுகளைச் சிதைத்துவிடும் என்றும் அவர் வாதிட்டார்.  இதனை “அப்பட்டமான பொய்” எனச் சாடியுள்ள காங்கிரஸ் மூத்த தலை வர் பிரியங்கா காந்தி, “பிரதமர் இப் போது சபாநாயகர் பின்னால் ஒளிந்து கொள்கிறார்” என்று குற்றம்சாட்டியுள் ளார். நேற்று அவைக்கு வரத் துணி வில்லாத காரணத்தினால்தான், இன்று சபாநாயகரை வைத்து இப்படிப் பேசச் சொல்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார். பெண் எம்.பி.,க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து போராடுவதைக் கண்டு பிரதமர் அஞ்சு வதாகவும், தனது பயத்தை மறைக்கப் பெண் உறுப்பினர்கள் மீது பழி போடுவ தாகவும் காங்கிரஸ் தரப்பு கடுமை யாகச் சாடியுள்ளது.  அச்சுறுத்தும் எப்ஸ்டீன் கோப்புகள்  மற்றொரு பக்கம், சர்வதேச அள வில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘ஜெப்ரி எப்ஸ்டீன்’ கோப்புகளில் இந்திய அமைச்சர்களின் பெயர்கள் தொடர்புபடுத்தப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் கேள்விகளைத் தொடுத்துள்ளன. இளம்  சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய குற்றவாளி எப்ஸ்டீன் உடன் இந்திய அதிகார வர்க்கத்தில் உள்ள சிலருக்குத் தொடர்பு இருப்ப தாகக் கூறப்படும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்துப் பேச முற்பட்ட ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்தது, ஏதோ ஒரு பெரிய உண்மையை அரசு மறைக்கப் பார்க்கிறதோ என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.  அதானியைப் பாதுகாக்க அடகு வைக்கப்படும் விவசாயிகள்  அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சி கள் முன்வைக்கும் பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் மிக வீரியமானவை. கவுதம் அதானிக்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பத ற்காகவும், அமெரிக்காவின் அழுத்தங் களுக்குப் பணிந்தும், இந்திய விவ சாயிகளின் நலனைப் பிரதமர் மோடி  அடகு வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அமெரிக்க விவ சாயப் பொருட்களுக்கு 0% இறக்குமதி வரி விதிப்பதன் மூலம், மலிவான வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும். இதனால் இந்தியப் பருப்பு வகைகள், தானி யங்கள் மற்றும் பால் பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் நடுத்தெருவிற்கு வரும் சூழல் உரு வாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களை அரசு வெளி யிடாமல் இருப்பது, கார்ப்பரேட் நிறு வனங்களின் நலனுக்காகவே அரசு செயல்படுவதைக் காட்டுகிறது.  மதுரை எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 பேர் சஸ்பென்ட்  இந்த பிரச்சனைகளில் எதிர்க் கட்சித் தலைவரை பேச விடாமல் தடுக்கும் மோடி அரசுக்கு அவையில் கண்டனம் தெரிவித்தும் நியாயமான கேள்விகளை எழுப்பியும் போராடிய மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் உட்பட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இந்தத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி.,  கூறு கையில், “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசவிடாமல் தடுத்துவிட்டு, நாங்கள் போராடியதற்காக எங்களை  வெளியேற்றியுள்ளனர்” என்று சாடி யுள்ளார். அவையில் மிகத் தீவிரமாகச் செயல்படும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து வெளியேற்றுவதன் மூலம், விவாதமே இல்லாத ஒரு ஒருதலைப்பட்சமான அவையை நடத்த மோடி அரசு துடிக்கிறது.  சபாநாயகரின் ஒருதலைப்பட்சப் போக்கு  சபாநாயகர் பதவி என்பது நடுநிலை யானது. ஆனால், தற்போதைய சூழலில் சபாநாயகர் ஆளுங்கட்சி யின் ஊதுகுழலாகச் செயல்படுவ தாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டு கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அவைத் தலைவர் இருக்கையில் இருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், ராகுல் காந்தி  பேசத் தொடங்கியதும் தற்காலிக சபாநாயகரை அமர வைத்தது, திட்ட மிட்ட சூழ்ச்சி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.  குறிப்பாக, தேசப் பாதுகாப்பு போன்ற முக்கியமான விவகாரங் களைக் கூட ‘விதிமுறைகள்’ என்ற போர்வையில் பேசவிடாமல் தடுப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி யுள்ளது. விழித்துக்கொள்ளுமா  மக்கள் மன்றம்? மோடி அரசு பின்பற்றும் இந்தச்  சூழ்ச்சி வலை, நீண்ட காலத்திற்கு  நீடிக்க முடியாது. நாடாளுமன்றத்திற் குள் குரல்களை நசுக்கலாம், ஆனால் மக்கள் மன்றத்தில் எழும் கேள்விகளை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. மக்களவைக்கு வராமல் ஒளிந்து கொண்ட பிரதமர், அதே நாள் மாலை யில் மாநிலங்களவைக்குச் சென்று, “எதிர்க்கட்சிகள் ஜனநாயகக் கோவி லைத் தீட்டுப்படுத்துகின்றன” என்று பேசி யுள்ளார். இது, உண்மையில் கேள்வி கேட்கும் ஜனநாயக உரிமையைத் தற் காக்கும் போராட்டத்தை இழிவுபடுத்து வதாகும். ராணுவ ரகசியம், சர்வதேச ஊழல் புகார்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு என அனைத்து முனைகளிலும் நெருக்க டியைச் சந்திக்கும் மோடி அரசு, தற்காலிகமாக உறுப்பினர்களை வெளி யேற்றுவதன் மூலமும், சபாநாயகரை ஒரு கவசமாகப் பயன்படுத்துவதன் மூலமும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கி றது. இந்திய நாடாளுமன்றத் தில் முடக்கப்பட்ட ஒவ்வொரு குரலும், வரும் நாட்களில் தெருவெங்கும் எதி ரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.