இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் 6 ஆவது முறையாக இந்தியா சாம்பியன்
ஹராரே ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வந்த ஆடவர் 16ஆவது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி முதலில் களமிறங்கி யது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி தனது சூறாவளி ஆட்டத் தால் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித் தார். இதன்பலனாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்களை குவித்தது. 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடின இலக்கு டன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 311 ரன்களில் (40.2 ஓவர்கள்) அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்ட மிழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஆறாவது முறையாக இளையோர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
