மூத்த தோழர் ஜி. மாதேஸ்வரன் காலமானார்
கரூர், பிப்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசுவின் தந்தை தோழர் ஜி. மாதேஸ்வரன்(87), வயது மூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை மதியம் உயிரிழந்தார். தோழர் ஜி. மாதேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கரூர் தாலுகா கமிட்டியின் உறுப்பினராக பல ஆண்டுகள் திறம்பட பணியாற்றி வந்தார். வெகுஜன அமைப்புகளில் பல்வேறு கட்ட போராட்டங்களில் கலந்து கொண்டு தனக்கு கட்சி வழங்கிய பணியை சிறப்பாக செய்து வந்ததுடன், தன் வாழ்நாளின் கடைசிவரை மார்க்சிய கொள்கையுடன் கட்சி உறுப்பினராக வாழ்ந்து காட்டினார். கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு காலமானார். தோழரது இறுதி ஊர்வலம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு செங்குந்தபுரம் அவரது இல்லத்திலிருந்து துவங்கி, கரூர் பாலம்மாள்புரம் மின் மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சச்சிதானந்தம், மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மருத்துவர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பி. ஜீவானந்தம், ஆர்.ஹோச்சுமின், எம். தணடபாணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாவட்டத் தலைவர் எம்.எஸ். அன்பழகன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சிவா, தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
