tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காவிரி நீர் மேலாண்மை  ஆணையம்

பிப்.13-இல் கூடுகிறது சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 48  ஆவது கூட்டம் தில்லியில் பிப்.13 ஆம் தேதி நடைபெற வுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 47 வது  கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு ஜனவரி மாதம் 2.76 டிஎம்சி  தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அந்த கூட்டத்தில் கர்நாடகா வுக்கு ஆணையிட்டது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 48 ஆவது கூட்டம் தில்லியில் பிப்.13 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை யில் தில்லியில் உள்ள அந்த ஆணையத்தின் அலுவலகத் தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம், கர்நாடகம்,  கேரளம் மற்றும் புதுச்சேரி நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல் அனுப்பியுள்ளது.  காவிரியில் இருந்து மாதாந்திர நீர் திறப்பு குறித்து கூட்டத்தில்  ஆலோசிக்கப்படவுள்ளது. காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது  தொடர்பான விவகாரத்தில் கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கத்தின் அடிப்ப டையில் மத்திய நீர்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்  என கடந்த 2025 நவம்பர் 13 ஆம் தேதி உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் தமிழகம் வருகையில் மாற்றம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறவுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி 28 ஆம் தேதி பிரதமர் வருகை தருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில், மார்ச் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜன நாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

10, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கள் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 வகுப்பிற்கு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச்  26 வரையும், பிளஸ் 1 வகுப்பிற்கு மார்ச் 3 ஆம் தேதி  தொடங்கி, மார்ச் 27 வரையும், பத்தாம் வகுப்பிற்கு மார்ச்  11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரையும்  நடைபெறவுள்ளன. தேர்வு எழுத தகுதியுள்ளவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.  பிப்ரவரி மாதத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், பிளஸ் 2 வகுப்புக்கு பிப்.9 முதல்  14 ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்.16 முதல்  21 ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு பிப்.23 முதல்  28 ஆம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்  என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகளை நடத்துவதற்காக ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழ கத்தில் 10 ஐபிஎஸ் அதி காரிகள் உள்பட 13 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு  உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஜி ஏ.கயல் விழி சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பி னர் செயலராகவும், வேலூர் எஸ்பி மயில்வாக னன் சென்னை தெற்கு  சரக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.யாகவும்  இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கும்பகோ ணம் ஏஎஸ்பி அங்கித்  சிங், எஸ்.பி.யாக பதவி  உயர்வு பெற்று, சேலம்  வடக்கு துணை ஆணைய ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை தேர்தல்  அதிகாரி ஆலோசனை

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 17ஆம் தேதி வெளியிட வுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு  தீவிர திருத்த இறுதிக் கட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதி காரி அர்ச்சனா பட்நாயக்  ஆலோசனை மேற் கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி சில நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இறுதி வாக்கா ளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு  தீவிர திருத்த இறுதிக்கட்ட பணிகள் குறித்து தலைமை தேர்தல் அதி காரி மாவட்ட ஆட்சியர் களுடன் விரிவான ஆலோ சனை மேற்கொண்டு உள்ளார்.

சிபிஐ முன்னாள்  எம்எல்ஏ காலமானார்

 குடியாத்தம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் குடி யாத்தம் தொகுதி முன் னாள் சட்டமன்ற உறுப் பினருமான லிங்கமுத்து உடல்நலக் குறைவால் காலமானார். 2011 தேர்த லில் குடியாத்தம் தொகு தியில் வெற்றி பெற்ற இவர், கட்சியின் மாநில  பொதுக்குழு உறுப்பி னர் உள்ளிட்ட பல பொறுப் புகளை வகித்துள்ளார்.

காரல் மார்க்ஸ் சிலை திறப்பு: சிஐடியு பாராட்டு

சென்னை, பிப்.6 - தமிழ்நாடு அரசு மாமேதை காரல் மார்க்ஸ்-க்கு சிலை வைத்ததற்கு சிஐடியு பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னை மாநகரம் கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அருங்காட்சியக வளாகத்தில், கம்பீரமான தோற்றத்தில் காரல் மார்க்ஸ் அவர்களின் சிலையை தமிழ்நாடு அரசு சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாநிலக் குழு சார்பில் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கும், கோரிக்கை வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவிற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். உலகம் முழுவதும் வறுமை, வேலையின்மை அதிகரித்து வருகிறது. மறுபுறம் செல்வந்தர்கள் வசம் செல்வம் குவிந்து வருகிறது. உழைப்பு சுரண்டல் காரணமாகத்தான் இந்த செல்வ குவிப்பு நடந்து வருகிறது. இந்த வறுமையின் கொடுமைக்கு தீர்வு சோசலிசம் என்பதை முன்வைத்த பெருமைக்கு உரியவர் காரல் மார்க்ஸ் ஆவார். உலகில் இதுவரை எத்தனையோ தத்துவ வியாக்கியானங்கள் நடந்துள்ளன. ஆனால் இப்போதைய தேவை சமூகத்தை மாற்றுவதே எனக் கூறியது மார்க்ஸ்தான். அதனால் தான் மார்க்ஸ் தனிச் சிறப்புடன் நினைக்கப்படுகிறார்.  உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மீது ஆளும் வர்க்கம் மற்றும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுடன் இணைந்து தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்து வருகிறது. இந்த பின்னணியில் சென்னை மாநகரில் தமிழ்நாடு அரசு சார்பில் மார்க்ஸ்க்கு சிலை நிறுவுவது என்ற முடிவும், அதை திறந்து வைத்ததும் மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாகும்.     இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.