tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

எதிர்க்கட்சிகள் ஒரு பிரச்சனையை பற்றி பேசினாலே பிரதமர் மோடி ஏன் இவ்வளவு வருத்தமடைகிறார்? முதலில் உண்மையைச் செவிமடுத்துக்  கேட்க வேண்டும். பிறகு பதிலளிக்க வேண்டும். சொல்வது தவறு என்றால், அதை மறுத்துச் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரச்சனைகளுக்குப் பதிலளிக்க மோடிக்கு துணிச்சல் இல்லை. 

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

முன்னாள் பிரதமர்களுக்கு எதிராக தனிப்பட்ட விமர்சனங்கள் அதிகம் எழுகிறது. இவை கண்டிக்கத்தக்கவை ஆகும். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் முன்னாள் பிரதமர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க வேண்டும். இது ஜனநாயக நாடு.

ஊடகவியலாளர் ஆதித்யா மேனன்

உத்தரப்பிரதேசத்தின் சந்தௌலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்குவதற்காக தமக்கு அடையாளம் தெரியாத உறையொன்று வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளார். நீக்கப்பட வேண்டியதாகக் குறிக்கப்பட்ட பெயர்கள் அனைத்தும் முஸ்லிம் வாக்காளர்களுடையவை ஆகும்.

திமுக எம்.பி., பி.வில்சன்

அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடத்துவதை உறுதி செய்யும் தனிநபர் மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளேன். ஆன்லைன் வழக்கு விசாரணை நடைமுறையில் வந்தால், வழக்குகள் தாமதமடைவது குறையும்; வழக்குத் தொடர்பான செலவுகளும் கணிசமாக குறையும்.