tamilnadu

img

நலவாழ்வு சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும்!

நலவாழ்வு சேவை உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும்!

சென்னை, பிப். 6 - நலவாழ்வு சேவை உரிமைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டுமென்று வலி யுறுத்தப்பட்டு உள்ளது. நலவாழ்வு உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று (பிப்.6) சென்னை யில் நலவாழ்வு உரிமை மாநில மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சுகாதாரம் அல்லது நலவாழ்வு என்பது அரசு களால் மக்களுக்கு அளிக்கப்படும் சலுகை யல்ல. அது அவர்களது உரிமை. அதை அளிப்பது  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை. ‘நலவாழ்வு’ என்பது சத்தான உணவு, சுத்தமான தண்ணீர், கல்வி, மாசற்ற சுற்றுச்சூழல் இவற்று டன் நிரந்தர வருமானத்தை தரக்கூடிய வேலை ஆகியவற்றை கொண்டது. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை அகற்றவதன் மூலமே அதை உறுதிப்படுத்த முடியும். அப்போதுதான் நோய்த் தடுப்பு மருத்துவம் துவங்கி, நோய் தீர்க்கும் அனைத்து சிகிச்சைகளும் அனைவருக்கும் கிடைக்கும். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேசப்  பிரகடனங்களில் ஒன்றிய அரசு கையெழுத்திட் டுள்ளப்படி நலவாழ்வு உரிமை சட்டத்தை இயற்றி  நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே நலவாழ்வு சேவை உரிமைச் சட்டத்தின்  கூறுகளுடன் சில திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில், விபத்தில் காயமடைந்தவருக்கு அவசர சிகிச்சை அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும்  தனியார் மருத்துவமனைகளில் கிடைப்பது போல,  அனைத்து அவசர சிகிச்சைகளும் கிடைப்பதை நலவாழ்வு சேவை உரிமைச் சட்டம் உறுதி செய் யும். நலவாழ்வு சேவைகள் உரிமைச் சட்டத்தை,  பொது சுகாதார சட்டத்தோடு இணைத்து நடை முறைப்படுத்தினால், மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்துவது, நிரந்தர அடிப்படையில் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துப் பணியா ளர்களும் நியமிக்கப்படுவார்கள். மருத்துவ சேவைகளில் குறைபாடுகள் இருப்பின் முறை யான ‘குறைதீர்ப்பு’ நடவடிக்கை எடுப்பது போன்றவை நடைமுறைக்கு வரும். சட்ட ரீதியான  தீர்வுகளையும் பெறமுடியும். எனவே, தமிழ்நாடு அரசு ‘நலவாழ்வு சேவை  உரிமைச்’ சட்டத்தை உடனடியாக இயற்றி நடை முறைப்படுத்த வேண்டும். இதற்கு தேவையான முன்னெடுப்புகளை அனைத்து அரசியல் கட்சிகள் மேற்கொள்வதோடு, தங்களது தேர்தல் அறிக்கைகளிலும் அவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது. நலவாழ்வு சேவை உரிமை பிரகடனம் இந்த மாநாட்டின் நிறைவாக, மருந்து மற்றும்  தடுப்பூசிகளை, பொதுத்துறை நிறுவனங்களை புனரமைத்து உற்பத்தி செய்து அனைவருக்கும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றிற்கு (ஜிஎஸ்டி)  முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். போலி அறிவி யல் மற்றும் அறிவியலுக்குப் புறம்பான நலவாழ்வு  கருத்துக்களை எதிர்ப்போம். மருத்துவக் கல்வி யில் தனியார்மயமாக்கலையும், வணிகமயமாக்க லையும் எதிர்ப்போம். மருத்துவர், செவிலியர்  உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர் களை தேவையான எண்ணிக்கையில் உயர்த்த அரசு கல்வி நிறுவனங்களை உருவாக்குவோம். அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரப் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும். தனியார்மய மாக்கலின் முன்னோட்டமான அரசு-தனியார் கூட்டு  திட்டங்களை எதிர்ப்போம். விளிம்புநிலை மக்கள்,  பெண்கள் , குழந்தைகள், கூலித்தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவைகளை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரகடனம் வெளியிடப்பட்டது. மாநாட்டிற்கு மக்கள் நல்வாழ்விற்கான மருத்து வர் அரங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ். காசி தலைமை தாங்கினார். அகில இந்திய  ஓய்வுபெற்ற மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் சங்கத்தின் தலைவர் ஆர். ரமேஷ்சுந்தர் வரவேற்றார். கண்காட்சியை மக்கள் நல்வாழ்விற் கான மருத்துவர் அரங்கத்தின் மதிப்புறு தலைவர்  டாக்டர் சி.எஸ். ரெக்ஸ் சற்குணம் கண்காட்சியை திறந்து வைத்தார். ‘நலவாழ்வு சேவை உரிமைச் சட்டம் சாத்தி யமா?’ எனும் நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.  ராமகிருஷ்ணன் வெளியிட, எஸ். சுகுமார் பெற்றுக்  கொண்டார். மாநாட்டின் நோக்கம் குறித்து உலக  நலவாழ்வு இயக்கத்தின் மேனாள் தலைவர் டாக்டர் டி. சுந்தரராமன் பேசினார். மூத்த பத்திரி கையாளர் என்.ராம், இந்திய மருத்துவ சங்கத்தின்  முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் தலைவர் முனைவர் டி. திருநாவுக்கரசு நன்றி  கூறினார். பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற அமர்வுகளில் அறிஞர்கள் உரையாற்றினர்.