states

ரயில்களில் ஆர்ஏசி கட்டண முறைக்கு நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு

ரயில்களில் ஆர்ஏசி கட்டண முறைக்கு நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு

ரயில்களில் ஆர்ஏசி (RAC - Reserva tion Against Cancellation) முறை யின் முழுகட்டணம் வசூலிப்பதற்கு  நாடா ளுமன்ற நிலைக்குழு கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக நாடாளு மன்ற நிலைக்குழு,”முழு கட்டணத்தைச் செலுத்தியும், தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணி களுக்கு இது பெரும் அநீதி. ஒரு முழு  பெர்த்தை (ரயில் இருக்கை) இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டு கிறது. ஆனால் பயணிகளுக்கு உரிய வச திகள் வழங்கப்படுவதில்லை. எனவே ஆர்ஏசி பயணிகளிடம், முழு கட்டணத்தில் பாதியை திரும்ப வழங்க வேண்டும். ஆர்ஏசி பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணத்திலும் சலுகை வழங்கப்பட வேண்டும். இயலவில்லை என்றால் அவர்களுக்குக் கட்டண ரீதி யாக ஏதேனும் ஒரு பலன் கிடைக்க வேண்டும். ஆர்ஏசி நடைமுறையை உடன டியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை மூலமாக  அறிவுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு என்பது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க் களை உள்ளடக்கிய குழுவாகும். எதிர்க் கட்சி எம்.பி.,க்கள் இந்த குழுவில் இருப்ப தால், ரயில்களில் ஆர்ஏசி கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன.