ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான விதிக்கப்படும் வட்டி விகிதத்தை ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ரெப்போ வட்டி விகிதம் 2 மாதத்துக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். இதனை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரெப்போ வட்டி விகி தத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெள்ளியன்று தெரிவித்துள் ளார். தற்போது இருப்பதை போல் 5.25% என்ற அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார். ரெப்போ வட்டி விகிதம் தான் வங்கிகளில் மக்கள் வாங்கும் கட னுக்கான வட்டியை நிர்ணயம் செய்கிறது. ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வங்கி யில் நாம் வாங்கிய வீடு, கார், கல்வி உள்ளிட்ட கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி குறையும். ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்தால் வங்கியில் வாங்கிய கட னுக்கான வட்டியும் அதிகரிக்கும். இதனால் ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பை பலரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால் கடந்த ஆண்டு முதல் அடிக்கடி ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாதம் கூட குறைக்கப்பட்டது. அது மட்டுமின்றி பிப்., 1ஆம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் டுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் தொடர்பான அறிவிப்பு முதல் முறையாக வெளியாகிறது என்பதால் அனைவரும் அதிகம் எதிர்பார்த்தனர்.