headlines

img

அறிவுக் கூடத்தில் மிளிரும் அரும்பெரும் தத்துவஞானி

அறிவுக் கூடத்தில் மிளிரும் அரும்பெரும் தத்துவஞானி

சென்னையின் அடையாளங்களில் ஒன் றான கன்னிமாரா பொது நூலக வளாகத்தில், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் பேராசான் தோழர் காரல் மார்க்ஸின் சிலையைத் தமிழக  அரசு நிறுவி, அதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

தத்துவங்களால் உலகை மாற்றியமைத்த ஒருமாமேதைக்கு அறிவின் கருவூலமான நூலக வளாகத்தில் இடமளித்திருப்பது மிகப் பொருத்த மான ஒரு செயலாகும்.வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்தப் பகுதியில் மார்க்ஸின் சிலை நிறுவப்பட்டிருப்பது ஒரு தார்மீக வெற்றியாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இதே கன்னி மாரா நூலகத்தில் போல்ஷ்விக் புரட்சி சார்ந்த நூல்களுக்கும், மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகி யோரின் சிந்தனைப் புத்தகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எந்த இடத்தில் அறி வுக்குத் தடை இடப்பட்டதோ, அதே இடத்தில் இன்று மார்க்ஸின் சிலை கம்பீரமாக நிற்பது காலத்தின் நீதியாகும். அடக்குமுறைகளால் புத்தகங்களை முடக்க முடியும், ஆனால் அந்தப் புத்தகங்கள் விதைத்த தீப்பொறியை ஒரு போதும் அணைத்துவிட முடியாது என்பதற்கு இந்தச் சிலை ஒரு கண்கூடான சான்றாகும்.

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; இழப்பதற்கு ஏதுமில்லை, அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது” என்ற மார்க்ஸின் முழக்கம் இன்றும் உலகெங்கிலும் உள்ள உழைக் கும் வர்க்கத்திற்கு ஒரு உந்துசக்தியாகத் திகழ்கி றது. முதலாளித்துவச் சக்திகளின் சுரண்டலுக்கு எதிராகத் தொடர்ச்சியாக ஒலிக்கும் போராட்டக் குரல்களுக்கு மார்க்சியமே இன்றும் கருத்தியல் அடித்தளமாக விளங்குகிறது. இந்தியாவில் வலதுசாரி அரசியல் மேலோங்கி வரும் சூழலில், அதற்கு எதிரான ஒரு வலிமையான கோட்பாட்டுப் போரை முன்னெடுக்க மார்க்சி யம் இன்றியமையாதது.

அரசியல் மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள் என எது நிகழ்ந்தாலும், மானுட விடுதலைக் கான தத்துவங்களை யாராலும் வீழ்த்த முடி யாது. மார்க்சியம் என்பது வெறும் பொருளாதா ரக் கோட்பாடு மட்டுமல்ல, அது ஒரு பொன்னு லகைப் படைப்பதற்கான கனவு.

நூலகத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கும், இளைஞர்களுக்கும் இச்சிலை ஒரு புதிய தேடலை உருவாக்கும். மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரக் கோட்பாடு மட்டுமல்ல, அது சமத்துவத்தையும் சமதர்மத்தையும் நோக்கிய பயணத்தின்  அறி வியல் வழிகாட்டி. வர்க்க பேதமற்ற ஒரு சமூ கத்தைப் படைக்க விழையும் ஒவ்வொரு மனி தனுக்கும் இந்தச் சிலை ஒரு உத்வேகத்தை அளிக்கும். அறிவும் அரசியலும் கைகோர்க்கும் இடமாக கன்னிமாரா நூலகம் இனி மார்க்ஸின் நிழலில் மிளிரும். சமூக நீதியையும், உழைப்பா ளர் உரிமைகளையும் போற்றும் ஒரு மண்ணில், மார்க்சியச் சிந்தனைகளுக்கு அரசு அளித் துள்ள இந்த உயரிய மரியாதை காலத்தால் அழியாதது.