tamilnadu

img

மேகாலயா சுரங்க விபத்தில் சிக்கலாகும் மீட்பு பணி பலி எண்ணிக்கை 30-ஐ தாண்டும் அபாயம்

மேகாலயா சுரங்க விபத்தில் சிக்கலாகும் மீட்பு பணி பலி எண்ணிக்கை 30-ஐ தாண்டும் அபாயம்

ஷில்லாங் வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான மேகால யாவின் கிழக்கு ஜெயந்தியா மலை மாவட்டத்தின் தாங்ஸ்கு பகுதி யில், சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் வியாழனன்று 100 அடி ஆழத்திற்கு கீழாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெள்ளியன்று மாலை நிலவரப்படி, இந்த சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அசாம் உள்ளிட்ட அண்டை மாநி லங்களின் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் என செய்திகள் வெளி யாகியுள்ளன. 50 அடிக்கு மேல் சுரங்கத்தின் 100 அடிக்கு கீழ்  வெடிவிபத்து ஏற்பட்டது. உடனடி யாக மேற்கொண்ட மீட்புப் பணி களால் 100 அடிக்கு மேலே இருந்த தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட் டோர் படுகாயங்களுடன் மீட்கப் பட்டனர். இதில் 18 பேர் உயிரிழந்துள் ளனர். ஆனால் 100 அடிக்கு கீழே எத்தனை தொழிலாளர்கள் உள்ள னர் என்பது தொடர்பாக உறுதியான தகவல் வெளியாகவில்லை. குறிப்பாக வெடிவிபத்து நிகழ்ந்த வளையில் சுமார் 50 அடி ஆழத்தில் தண்ணீர் கசிந்து கொண்டிருப்பதால், சேறு கீழே விழுந்து கொண்டே இருக்கிறது. உள்ளே செல்லச் செல்ல நீரின் அளவு அதிகரிப்பதால் மீட்புக் குழு வினரால் முன்னேறமுடியவில்லை.  ஆனால் மற்ற இரண்டு வளைகளில் 25 அடி தூரம் வரை தேடியும் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. வெடிவிபத்து நிகழ்ந்த பாதைகளில் இருந்து மேலும் பல கிளைப் பாதைகள் பிரிகின்றன. இதனால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. 30 பேர் ‘எலி-வளை’ சுரங்கங்கள் வெறும் 2 அடி உயரமும் 3 அடி  அகலமும் மட்டுமே கொண்டவை. இதில் ஊர்ந்து மட்டுமே செல்ல முடியும் என்பதால் மீட்புப் பணியை மிகவும் கடினமாக்குகிறது. ஆனால் குறைந்தப்பட்சம் இன் னும் 10க்கும் மேற்பட்டோர் சுரங்கத் தில் சிக்கி இருக்கலாம் ; இதனால் பலி எண்ணிக்கை 30-ஐ தாண்டும் அச்சம் நிலவுவதாக மீட்புப் படை தரப்பில் இருந்து செய்திகள் வெளி யாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோத சுரங்கத்தின் உரிமையாளர், பொறுப்பாளர் என 2 பேரை மேகாலயா காவல்துறை கைது செய்துள்ளது.