சென்னை, ஜூன் 1-தமிழக அரசின் ஏழை, விதவை குழந்தைகளுக்குப் பாடநூல் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது.தமிழக அரசின் திருமண நிதியுதவி பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 24 ஆயிரமாக இருந்து வருகிறது. இதேபோல், ஏழை, விதவை குழந்தைகளுக்கான இலவச பாடநூல், குறிப் பேடு வழங்கும் திட்டத்துக்கும் ரூ. 24 ஆயிரம் வருமான உச்சவரம்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அரசின் இத்திட்டங்களில் ஆண்டு வருமான உச்சவரம்பு 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.இதேபோல், மூன்றாம் பாலினத்தவர் நலத்திட்ட உதவி வழங் கும் திட்டத்துக்கும் வருமான உச்சவரம்பு ரூ. 72 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.