தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக கூறி அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் வைக்கோ குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தண்டனையையும் இன்றே அறிவிக்குமாறு வைக்கோ தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையையடுத்து அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.