tamilnadu

img

பள்ளித் தலைமை ஆசிரியை தேசத்துரோக வழக்கில் கைது.... மோடியை விமர்சித்து நாடகம் போட்டார்களாம்

பெங்களூரு:
குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ள்ளியில் நடத்தப்பட்ட நாடகத்திற் காக, பள்ளி தலைமை ஆசிரியரையும், 6-ஆம் வகுப்பு மாணவரின் தாயையும் தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பிதார் பகுதியிலுள்ள ‘ஷாகீன் ஸ்கூல்’ பிரபலமானதாகும். இந்த பள்ளி அமைந்திருக்கும் பிதாரில் இருந்து, கடந்த 2018-ஆம்ஆண்டு 327 பேர் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம் ஷாகீன் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்ற நிலையில், அதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விமர் சிக்கும் நாடகம் ஒன்றை மாணவர்கள் அரங்கேற்றியுள்ளனர். 4 முதல் 6-ஆம் வகுப்பு மட்டத்திலான மாணவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்று நடித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவர்கள் நடித்தநாடகம், பிரதமர் மோடியை களங்கப் படுத்தும் வகையில் இருந்ததாக கூறி,நீலேஷ் ரக்ஷைலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 504, 505(2), 124(ஏ), 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தினர்.அதன்தொடர்ச்சியாக தற்போது, ஷாகீன் பள்ளி தலைமை ஆசிரியையும், மாணவர் ஒருவரின் தாயையும் கைதுசெய்துள்ளனர்.நாடகத்திற்கான அசல் கதை வசனத்தில், பிரதமருக்கு எதிரான சொற்கள்இல்லை; ஆனால், ஆறாம் வகுப்பு மாணவரின் தாயார் ஒருவர், ஒத்திகையின் போது அதனை இணைத்துள்ளார்; பள்ளித்தலைமை ஆசிரியையும் அதனை அனுமதித்துள்ளார் என்று போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.