சென்னை:
கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6ஆம் தேதி முதல் ஆய்வு செய்கிறார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6 ஆம் தேதி முதல் ஆய்வு செய்கிறார்.அப்போது அவர் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்குகிறார்.ஏற்கனவே கிருஷ்ணகிரி, சேலம், கோவை, மாவட்டங்களில் முதல்வர் இதுபோன்ற ஆய்வை நடத்தியுள்ளார்.