tamilnadu

சென்னையில் இன்று சிஐடியு பேரணி

தோழர் முகமது அமீன் நகர்(சென்னை),ஜன. 26-  இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) 16வது அகில இந்திய மாநாடு இன்று (ஜனவரி 27) சென்னையில் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி - பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. ஜனவரி 23 முதல் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் திங்களன்று பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பொதுச் செயலாளர் தபன்சென் பதிலளித்து தொகுப்புரை நிகழ்த்து கிறார். இதைத்தொடர்ந்து சிஐடியு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. பேரணி - பொதுக்கூட்டம் இதைத்தொடர்ந்து மாநாட்டின் முத்தாய்ப்பாக மாபெரும் பேரணி சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகிலிருந்து மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் (சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் திடல்) கலைநிகழ்ச்சிகளுடன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் பொதுக்கூட்டம் துவங்குகிறது. தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.  தோழர்கள் கவனத்திற்கு... இந்த பேரணிக்கு வாகனங்களில் வருவோர் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகில் இறங்கிவிட்டு, வாகனங்களை மெரினா கடற்கரைக்கு அனுப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8903143682, 9444915396, 9710326278, 9003059876