districts

img

சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திடுக! சிஐடியு பேரணி, ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.24- சுமைப் பணி தொழிலா ளர்களுக்கு தனி நலவாரி யம் அமைக்க வேண்டும். ஐஎல்ஓ ஒப்பந்தப்படி 100 கிலோ மூட்டை சுமப்பதை தடை செய்ய வேண்டும். நகர்ப்  புற வீட்டுவசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும், நல வாரிய பலன்களை இரட் டிப்பாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு திருச்சி மாவட்ட சுமைப் பணி தொழி லாளர் சங்கம் சார்பில்  வியாழனன்று திருச்சியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப் பணி சங்க மாவட்டச் செய லாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். சுமைப் பணி சம்  மேளன மாநில செயலாளர் அருண்குமார், மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனி வாசன், மாவட்டப் பொரு ளாளர் மணிகண்டன், மாவட் டத் துணைத்தலைவர் ரமேஷ்  ஆகியோர் பேசினர். முன்னதாக வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகில்  இருந்து தொடங்கிய பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் நிறைவடைந் தது. பேரணி மற்றும் ஆர்ப் பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.