கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு இருப்பதால் அரசுக்கு சொந்தமான மது கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு சில இடங்களில் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படு வதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, அனைத்து மாவட்ட மேலாளர்களும் விழிப்புடன் செயல்பட்டு சட்டவிரோத மது விற்பனை எங்கேனும் நடந்தால் உடனடியாக மதுவிலக்கு பிரிவுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் பொது மேலாளர் கிர்லோஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.