சென்னை, ஜூன் 16- பள்ளிகள் திறக்கப்படும்போது ஆன்லைன், பள்ளி களில் நேரடியாக பாடங்களை நடத்தும் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர் பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு லீட் ஸ்கூல் கையேட்டை பரிந்துரைத்துள்ளது. அதில் சமூக இடைவெளியை பராமரிக்க மற்றும் செயல்பாட்டு செலவைக் குறைக்க ஒன்று விட்ட நாள் பள்ளிமுறை அல்லது இரட்டை ஷிஃப்ட்களில் பள்ளி களை செயல்படுத்தலாம், மதிப்பீடுகளை முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் தளர்வுகளுடன் கூடிய மதிப்பீடுகள், ஒவ்வொரு மாணவருக்கும் இடையில் ஒரு வெற்று இருக்கை அல்லது ஒரு மேசைக்கு ஒரு மாணவர் அல்லது ஒரு நடுத்தர மேசைக்கு இரண்டு மாணவர்கள் அல்லது நீண்ட மேசைக்கு மூன்று மாணவர்கள் அமர 6 அடி தூர இடை வெளியைப் பராமரிக்க முடியும். பள்ளி போக்குவரத்து நடைமுறையிலும் இதே போன்ற காலி இருக்கை நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். தொடுதல் மற்றும் தொடர்பு இல்லாத விளையாட்டுகள் மற்றும் யோகா, ஏரோபிக்ஸ், ஹாப்ஸ்கோட்ச், தடகள அல்லது பேட்மிண் டன், டேபிள் டென்னிஸ் போன்ற குறைந்த பட்ச தொடர்பு விளையாட்டுகளை மட்டும் தேர்வு செய்து தற்போதைய சூழலில் அவற்றை மட்டும் பள்ளிகளில் அனுமதிக்கலாம் உள்ளிட்ட பல யோசனைகளை அந்த கையேட்டில் லீட் ஸ்கூல் தெரிவித்துள்ளது.