ஐசிஎப் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி செவ்வாயன்று (நவ.25) ஐசிஎப் ஷெல் பகுதியில் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் ஜெ.பிரான்சிஸ் மெகோல்டு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் கே.டி.ஜோசி, செயல் தலைவர் என்.வேலாயுதம், இணை பொதுச்செயலாளர் எம்.பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் வெ.குருமூர்த்தி, பி.குமார், ஆர்.ரவிக்குமார், கே.முபாரக் அலி உள்ளிட்டோர் பேசினர்.
