tamilnadu

img

நாளை முதல் தமிழ்நாட்டில் 68 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்!

தமிழ்நாட்டில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நான்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட 68 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கார்கள் மற்றும் ஜீப்புகளுக்கான சுங்கக் கட்டணம் 5 ரூபாய் உயரும்; அதேவேளையில், பேருந்துகள் மற்றும் பிற கனரக வாகனங்களுக்கான கட்டணங்கள் 15 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து மக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.