நெய்வேலியில் வெளுத்து வாங்கிய மழை:
நிலக்கரி பணி பாதிப்பு கடலூர், மார்ச் 11- கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. நெய்வேலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நெய்வேலி என்எல்சி நிறு வனத்தின் சுரங்கம்1 , சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக மழை நீர் ஆர்ப்பரித்து சுரங்கத்தில் கொட்டுவதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கையிருப்பு அதிக அளவில் இருப்பதால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை தொடர்ந்து அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நடைபெற்று வரு கிறது. கனமழை காரணமாக என்எல்சி சுரங்கங்களில் ஆங்காங்கே சிறு சிறு மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மழை ஓய்ந்த பின்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் மீண்டும் தொடங்கும்.
கோயம்பேட்டில் குவியும் குப்பை அகற்றம்: வியாபாரிகள் மகிழ்ச்சி
சென்னை, மார்ச் 11- சென்னை கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் ஆகிய மார்க்கெட்டுகளில் குவிந்துவரும் குப்பை கழிவு களை சரிவர எடுக்காமல் தாமதம் செய்து வந்ததால் வியா பாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என அங்காடி நிர்வாக அலுவலகத்திடம் வியா பாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து குப்பை கழிவுகளை சரிவர எடுக்காமல் தாமதம் செய்துவரும் பழைய ஒப்பந்ததாரர்களை நீக்கிவிட்டு சீனிவாசா வேஸ்ட்மே னேஜ்மெட் என்ற புதிய ஒப்பந்ததாரரை நியமித்தனர். இந்த புதிய ஒப்பந்ததாரர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் குவியும் குப்பையை உடனுக்குடன் அகற்ற மொத்தம் 250 பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குப்பை அள்ளும் வாகனங்கள் 10க்கும் மேற்பட்ட லாரிகள் மேலும் 3 பொக்லைன் இயந்திரம் உடனுக்குடன் அகற்ற இந்த பணிக்காக பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இதன் காரணமாக, கடையில் சேர்த்து வைக்கும் குப்பை கழிவுகளையும் சேகரித்து வருவதால் சந்தை தூய்மையாக உள்ளது.