tamilnadu

img

அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு

அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு

சென்னை, மார்ச் 7- சென்னை, அதிகாரிகள் பயிற்சி அகாடமி யில் எஸ்எஸ்சி  பயிற்சி முடித்தவர்களின் பிரமாண்ட அணிவகுப்பு மற்றும் பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமையன்று நடை பெற்றது. பல மாத கடினமான பயிற்சிக்குப் பிறகு, 318 ஆண் மற்றும் 27 பெண் கேடட்கள் இந்திய ராணுவ அதிகாரிகளாகப் பொறுப் பேற்றுக்கொண்டனர். மேற்குப் படைப்பிரி வின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜென ரல் மனோஜ் குமார் கத்தியார் அணிவகுப்பை ஆய்வு செய்து, புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், பயிற்சிவீரர்கள் இந்திய அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருக்க உறுதியளித்தனர். பூட்டான் மற்றும் தான்சானியாவைச் சேர்ந்த 4 கேடட்களும் பயிற்சியை முடித்தனர். அகாடமியின் தலைவர் பியூஷ் பிஷ்ட் வாள் ஆஃப் ஆனர் விருதைப் பெற்றார். இந்த விழா, எதிர்கால ராணுவத் தலைவர் களின் அர்ப்பணிப்பு மற்றும் வீரத்திற்கான சான்றாக அமைந்தது.