tamilnadu

img

தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 சட்ட மசோதாக்களில், முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்தை உயர்த்துவது உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு கடந்த மாத இறுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
உள்ளாட்சி அமைப்பு சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை  நீட்டிக்கும் சட்ட மசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்ட முன்வடிவு மற்றும் தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட முன்வடிவு ஆகிய மூன்று சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.