திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுமுன்னணி அலுவலகங்கள், ஊழியர்களது வீடுகள், வாகனங்கள் மீது அங்கு ஆளும் பாஜக அரசின் ஆதரவோடு ஆயுதமேந்திய குண்டர்கள் மிகப்பெரிய அளவில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். செப்டம்பர் 8 அன்று நடந்த இந்தத் தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் உட்பட 25க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் மிக மோசமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன; சூறையாடப்பட்டுள்ளன; பல அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அலுவலகக் கார்கள், இருசக்கர வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் பலரது வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடிய வன்முறை தாக்குதல்களை எதிர்கொண்டு செங்கொடி இயக்கத்தை உயர்த்திப் பிடித்து பாதுகாத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழுவிற்கும் துணிச்சல் மிக்க கட்சி அணிகளுக்கும் தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், உறுப்பினர்கள், கட்சி அணிகளின் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் தங்களது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதற்கான தருணம் இது.
திரிபுராவில் ஆளும் கட்சியால் ஏவப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலை எதிர்த்து முறியடிக்கும் விதத்திலும் ஊழியர்களை பாதுகாக்கும் விதத்திலும் சேதப்படுத்தப்பட்டுள்ள - எரிக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகங்களை புனரமைக்கும் விதத்திலும் நாடு முழுவதிலுமிருந்து நிதி திரட்டி கட்சியின் திரிபுரா மாநிலக்குழுவிற்கு அனுப்புமாறு, கட்சியின் மத்தியக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் உதவி நிதி திரட்டி அனுப்பிட மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
முதல்பட்டியல்
என்.சங்கரய்யா - 2000
கே.பாலகிருஷ்ணன் - 1000
ஜி.ராமகிருஷ்ணன் - 1000
டி.கே.ரங்கராஜன் - 1000
உ.வாசுகி - 5000
அ.சவுந்தராஜன் - 500
பி.சம்பத் - 1000
பி.செல்வசிங் - 1000
எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் - 500
எஸ்.நூர்முகமது - 500
ஏ.லாசர் - 500
பி.சண்முகம் - 500
என்.குணசேகரன் - 500
கே.கனகராஜ் - 500
மதுக்கூர் இராமலிங்கம் - 500
பி.சுந்தராஜன் - 500
ஜி.உதயகுமார் - 500
ஐ.ஆறுமுகநயினார் - 500
ஆர்.பத்ரி - 500
வெ.ராஜசேகரன் - 500
வே.மீனாட்சி சுந்தரம் - 10000
கே.ராமசுப்பிரமணியன் - 2000
மாநிலக்குழு அலுவலக கிளை
எஸ்.சாமு - 1000
கே.எஸ்.சம்பத் - 500
டி.வில்சன் - 300
கே.சரவணன் - 100
டி.கே.ராஜன் - 250
வ.சங்கர் - 200
பா.தொழிற்செல்வி - 500
என்.ரமேஷ் - 200
கே.விநாயகம் - 200
கா.ராஜலட்சுமி - 200
நிதி அனுப்ப வேண்டிய விபரம்
SB A/C No: 418674546,
IFSC Code No: IDIB000T014,
Name: Communist Party of India (Marxist), Tamilnadu State Committee,
Indian Bank, T.Nagar Branch, Chennai-17.
ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் தோழர்கள், நண்பர்கள் தங்களது பெயர், மற்றும் முகவரி, அனுப்பிய தொகை, இ.டிரான்ஸ்பர் ரெபரன்ஸ் நம்பர், வங்கி செலான் ஆகிய விபரத்துடன் “திரிபுரா கட்சி மாநிலக்குழுவிற்கு உதவி நிதி” என்று தலைப்பிட்டு கட்சியின் மின்னஞ்சலுக்கோ (cpimtn2009@gmail.com), கடிதம் மூலமாகவோ தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம்.
காசோலை மற்றும் வரைவோலை அனுப்புவோர்கள் Communist Party of India (Marxist), Tamilnadu State Committee என்ற பெயருக்கு அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம். மணியார்டர் மூலம் அனுப்புவோர்கள் தங்களது பெயர், முகவரியுடன் கட்சியின் மாநிலக்குழு முகவரிக்கு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு மாநிலக்குழு, 27, வைத்தியராமன் தெரு, தி. நகர்,சென்னை - 600 017. போன்: 044-24341205, 24326800 / 24326900 Email: cpimtn2009@gmail.com) அனுப்பிடகேட்டுக் கொள்கிறோம்.
கே.பாலகிருஷ்ணன்,மாநிலச் செயலாளர் சிபிஐ(எம்)