tamilnadu

கேள்வி நேரத்திலிருந்து....

கலப்பு உரம் விற்பனை விவசாயிகளே உஷார்....
நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களால் தென்னை, ரப்பர், விவசாயிகள் கடன் பெறும் போது  கடன் தொகையில் 20 விழுக்காடு ரொக்கத்  திற்கு உரம் வாங்க வேண்டும் என கட்டாயப்  படுத்துகின்றனர். இயற்கை உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயி களை ரசாயனங்களை வாங்கக் கட்டாயப்ப டுத்துவது குறித்து திமுக உறுப்பினர் என்.சுரேஷ்ராஜன் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்து கூட்டுறவுத் துறை  அமைச்சர் செல்லூர் ராஜூ, “விவசாயிகள்  கடன் சுமையில் சிக்காமல் இருப்பதற்கு  அரசு வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது. இதற்கான 7 விழுக்காடு வட்டியை அரசே ஏற்கிறது. விவசாயிகளை உரங்கள் வாங்கச் சொல்வது விவசாயத்தைச் செழிப்பாக்க வேண்டும் என்ற எண்ணத்  தில்தான். வெளி மார்க்கெட்டில் கலப்பு உரம் விற்பனை செய்கிறார்கள். அதை  வாங்கி ஏமாற்றமடையாமல் விழிப்பு ணர்வை உருவாக்கத்தான் கலப்பு இல்லாத தரமான உரம், இயற்கை உரங்கள்  கூட்டுறவு மையங்களில் விற்கப்படு கிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

விழுப்புரம் சட்டக்கல்லூரி விரைவில் செயல்படும்!
மாவட்ட நீதிமன்றம் செயல்படும் இடங்களில் சட்டக்கல்லூரிகள் செயல்பட வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளின் படி காஞ்சிபுரத்தில் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்குமா? என  காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிழரசன் கேள்வி எழுப்பி னார். இதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “தற்போது அந்த மாவட்டத்தில் இரண்டு சட்டக் கல்லூரி கள் உள்ளதால் மாணவர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப வருங்காலங்களில் சட்டக்  கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கும்  என்றும் கடந்த முறை மூன்று மாவட்டங்க ளில் புதிதாக சட்டக் கல்லூரிகள் அறி விக்கப்பட்டது. விழுப்புரத்தில் அனைத்து  பணிகளும் முடிந்துவிட்டதால் மிக விரை வில் மாணவர் சேர்க்கை துவங்கும்” என்றார்.

மருத்துவத்துறை தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம்!
அரசு மருத்துவமனைகளில் துப்புரவு பணி, தீக்காயங்களுக்கு மருந்திடுவோர், கட்டுபோடுவர் உள்ளிட்ட பணிகளில் ஏராள மானோர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்  கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள்.  இந்த பணிகளில் மாற்றுத்திறனாளிகளும்  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனை வரையும் நிரந்தரம் செய்து காலமுறை ஊதி யம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உறுப்பினர் எ.வா. வேலு வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தற்காலிக ஊழி யர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி நிரந்தரம் செய்யப்படுகிறார்கள். அந்த பணி தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு மேலாகப்  பணி செய்து வரும் மாற்றுத்திறனாளி களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்றார்.