சூலூரில் 300 ஏக்கரில் தொழில்நுட்ப பூங்கா
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் புதிய தொழில் நுட்பப் பூங்கா வும், இராணுவ தடவாளங்கள் உற்பத்தி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பூங்கா அமைக்க அரசு முன்வருமா? என திமுக உறுப்பினர் கார்த்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சிங்கா நல்லூர் தொகுதியில் சிட்கோ நிறுவனம் சார்பில் ஏற்கனவே 9.14 லட்சம் சதுர பரப்பள வில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் பட்டு, அதில் 12 ஆயிரத்து 500 பேர் பணி புரிந்து வருகிறார்கள். மேலும் புதிய தொழில் பூங்கா அமைக்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார் என்றார். ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய உகந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று மத்திய அரசு தெரிவித்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர், சூலூர் பகுதியில் 300 ஏக்கர் பரப் பளவு நிலத்தில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றும் சென் னையில் ஏற்கனவே இருக்கக் கூடிய டைடல் பார்க் அருகே 5 லட்சம் சதுர அடியில் 8 மாடி கட்டிடம் கொண்ட புதிய டைடல் பார்க் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கால்நடை மருத்துவர்களை நிரந்தரம்...
திமுக உறுப்பினர் சுந்தர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன், “கால்நடை மருத்துவமனை களில் தற்காலிக பணியில் இருக்கும் 850 கால்நடை மருத்துவர்களின் பணியினை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வரு கிறது” என்றார்.
கல்வியில் பின்தங்கும் அமைச்சர் தொகுதி!
பென்னாகரம் வட்டம் ஏரியூரில் அரசு சார்பில் கலை, அறிவியல் கல்லூரி துவங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தருமபுரி மாவட்டம் கல்வித் தரத்தில் பின் தங்கியுள்ளது குறித்தும் திமுக உறுப்பினர் இன்பசேகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழ கன், “தருமபுரி மாவட்டத்திலுள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் பென்னாகரம், தனது சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட காரி மங்கலம், பாலக்கோடு ஆகிய மூன்று ஒன்றியங்கள் மட்டுமே கல்வித் தரத்தில் சற்று பின்தங்கியுள்ளது. அங்கு புதிய மாதிரி பள்ளிகள் அமைத்து மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலை படிப்புக்கு சென்ற மாணவர்களின் விகிதம் அதிகரித்துள்ள தாக தெரிவித்த அவர், உயர் கல்வியில் தமி ழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாகக் கூறினார்.