tamilnadu

குருப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

சென்னை, ஜூன் 20- வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் இதர அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட எட்டு விதமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட  உள்ளது. இதற்கான   குருப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. தகுதியுடைய நபர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஜூலை 14 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பை 7 ஆண்டுகளாக டாக்டர். அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து நடத்தி வருகிறது. அனைத்து  தலித்துகள் மற்றும் பழங்குடி யின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏனைய பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து மாணவர்களும்  பயன் பெறும் வகையில் திட்டமிட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த வகுப்பில் பயின்ற 800 கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் சேர்ந்து சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.  சென்னையில் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமையன்று (ஜூன் 22) காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.  வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடைபெறும்.  9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சி வகுப்பிற்கு வர விரும்புவோர் மார்பளவு போட்டோவும், குருப் 4  விண்ணப்பித்த விண்ணப்பத்தின்  நகலும் கொண்டு வர வேண்டும்.  எண்.6/9. சிஐடியு அலுவலகக் கட்டிடம், கச்சாலீசுவரர் கோயில் அக்ரஹாரம், அரண்மனைக்காரன் தெரு, பாரிமுனையில் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.  மேற்கண்ட தகவல்களுக்கு பாலாஜி (98847 47217), மோகன் (93449 51475),வாசுதேவன் (94446 41712) ஆகியோரை அனுகவும்.