விருத்தாசலத்தில் விலையில்லா மிதிவண்டிகள் மழையில் நனைந்து சேதம்
கடலூர், நவ.25 – கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள், மழைநீரில் நனைந்து வீணாகும் நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மிதிவண்டிகள் உருவாக்கப்பட்டு தளவாடப் பொருட்களு டன் பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னரும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றாமல் அலட்சியமாக வைத்திருந்த தால், கனமழையால் குளம் போல் தேங்கி யுள்ள நீரில் மிதிவண்டிகள் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மிதிவண்டிகள் துருப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, மாணவர்களுக்குத் தரமான மிதிவண்டி களை வழங்க முடியாத சூழல் உரு வாகியுள்ளது. கல்வித் துறை அதிகாரி கள் உடனடியாகச் சேதமடையும் மிதி வண்டிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும், அவற்றை மாணவர்களுக்கு விரைந்து விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண வர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
