புதுச்சேரி, ஜூலை 3- உருளையன்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் வெங்க டாசலபதி இந்திராகாந்தி சிலை அருகே ரோந்து பணியில் ஈடு பட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் வந்து கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு 4 பேர் பள்ளி- கல்லூரி மாண வர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனடி யாக அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்த ரிஷிகுமார் (வயது 19), அரியாங்குப்பத்தை சேர்ந்த லோகநாதன் (19), விக்னேஷ் (22), பாலாஜி (24) என்பது தெரிய வந்தது.