ரூ.70.23 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு அடிக்கல்
உதகை, மார்ச் 4- உதகை பந்தையச்சாலை பகுதி யில் ரூ.70.23 கோடி மதிப்பில் சுற்றுச் சூழல் பூங்கா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை பந்தையச்சாலை பகுதியில் ரூ.70.23 கோடி மதிப்பில் சுற்றுச் சூழல் பூங்கா திட்டப்பணிகளுக்கு, அரசு தலைமை கொறடா கா.ராமச் சந்திரன் புதனன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், உதகை பந்தையச் சாலை பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க திட்டமிட்டு, முதற் கட்டமாக ரூ.12.33 கோடி மதிப் பில்; பல்வேறு பணிகள் மேற் கொள்ளும் வகையில் அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தால் நிறைவேற்றப்படும் இத் திட்டத்தில், குளங்கள் அமைக்கப் பட்டு, அதனுள் பூர்வீகத் தாவரங் களுடன் கூடிய சுத்திகரிப்பு திட்டு களும், மிதிவண்டிப்பாதை, நடை பாதை விழிப்புணர்வு கண்காட்சிக் கூடம், கேளிக்கை அரங்கம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியன அமைக்கப்பட உள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சதுப்பு நில பரா மரிப்பு மற்றும் பூர்வீகத் தாவர பரா மரிப்பு ஆகியவை இத்திட்டத்தில் கருப்பொருளாக முன்னிருத்த செயல்படுத்தப்படும். மேலும், கோடைக்காலம் மற்றும் விடுமுறை காலங்களில் வருகை தரும் சுற்று லாப் பயணிகள், மாணவர்கள் மற் றும் புகைப்பட ஆர்வலர்கள் பெரும ளவில் அதிகரித்து உள்ளூர் பொரு ளாதாரம் மேம்படும், என்றார். இந்நிகழ்ச்சியில், உதகை சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் யுவராஜ், உதவி செயற் பொறியாளர் குணசேகரன், உதகை நகர்மன்றத் தலைவர் வாணீஸ் வரி, துணைத்தலைவர் ரவிக் குமார், மாவட்ட சுற்றுலா அலுவ லர் சங்கர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
