tamilnadu

img

தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் காலமானார்

சென்னை:
தேமுதிக முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நண்பருமான சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங் கிய நண்பராக இருந்தவர் சுந்தரராஜன். தேமுதிகவின் பொருளாளராக பொறுப்பு வகித்த இவர், தேமுதிக சார் பில் 2011ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், அவர் கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுந்தரராஜன் செவ்வாயன்று உயிரிழந்தார்.