tamilnadu

img

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5.10 கோடி உதவி

சென்னை:
தமிழகத்தில் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய் யும் சக்தி மசாலா நிறுவனம், கடந்த மார்ச் 30 அன்று தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி வழங்கியுள்ளது.தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகளுக்கு உதவும் பொருட்டும் அரசு எடுத்துவரும்  நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 2வது முறையாக ரூ. 5.10 கோடியை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது.இதுவரை சக்தி மசாலா நிறுவனம் தமிழக முதல்வர் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மொத்தம் ரூ. 10.10 கோடியை நிவாரண நிதியாக வழங்கி அரசுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் உறுதுணையாக உள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.