tamilnadu

img

கொரோனா தொற்றுக்கு பழம்பெரும் பின்னணி பாடகர் பலி

சென்னை:
பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனாவுக்கு உயிரிழந்தார். ஏற்கனவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தவருக்கு கொரோனா தொற்று ஏற் பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டையில் 1933ல் பிறந்தவர் ஏ.எல்.ராகவன். 1950 ஆம் ஆண்டில் கிருஷ்ண விஜயம் எனும் படத்தில் இசையமைப்பாளர் சி.எஸ்.ஜெயராமனால் இவர் பாடகராக அறிமுகம் செய்யப்பட்டார்.தொடர்ந்து (சி.எஸ்) சுப்புராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன் உள்பட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் நூற்றுக்கும் அதிகமான பாடல் களைப் பாடி திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

1980 ஆம் ஆண்டு வரை திரையுலகில் கோலோச்சிய ஏ.எல்.ராகவன், எங்கிருந்தாலும் வாழ்க.., என்ன வேகம் நில்லு பாமா.. போன்ற நூற்றூக்கும் மேற்பட்ட `ஹிட் பாடல்களை பாடியவர். பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனுக்கு இவர் பாடிய பாடல் கள் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.பாடகராக மட்டுமல்லாமல் அலைகள், அகல்யா என தொலைக் காட்சி தொடர்களிலும் ராகவன் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர் களை திருமணம் செய்து வாழ்ந்து வந்த ஏ.எல்.ராகவன் அண்மைக்காலமாக வயது மூப்பு காரணமாகவும் மூச்சுத் திணறல் காரணமாகவும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. போரூர் ராமச் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர் 87 வயதில் வெள்ளியன்று (ஜூன் 19)  காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.