தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயரில் வைக்கும் நடைமுறையை முறையாக பின் பற்ற நடவடிக்கை எடுக்குமா என்று திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும், அது தொடர்பாக தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ.500இல் இருந்து ரூ.2000 ஆக அபராதம் உயர்த்தப்பட்டிருக்கிறதாக தெரிவித்தார்.