சென்னை,ஏப்.21- தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம் செய்யப்ப தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையங்களில் நாள்தோறும் காலை நடைபெறும் வருகைபதிவு கூட்டத்தில், இருசக்கர வாகனத்தில் வரும் காவலர்கள், மேல் அதிகாரியிடம் தலைக்கவசத்தை காண்பிக்க வேண்டும் எனவும் தலைக்கவசம் இல்லாமல் வரும் காவலர்களின் வாகன சாவியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், ஐஎஸ்ஐ முத்திரை பதித்த தலைக்கவசம் வாங்கிவந்த பிறகு சாவியைக் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.