tamilnadu

img

வேலை உறுதி திட்டத்தில் காந்தி பெயரை மாற்றியதை கண்டித்து உண்ணாவிரதம்

வேலை உறுதி திட்டத்தில் காந்தி பெயரை மாற்றியதை கண்டித்து உண்ணாவிரதம்

கடலூர், டிச.30- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாநிலைப் போராட்டம் நடை பெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதோடு, திட்டத்திற்கான நிதியையும் வெகுவாக குறைத்துள்ள ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், இந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. இந்த மசோதா செயல்படுத்தப்பட்டால் இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய வழங்குவதில் மிகப்பெரிய சிக்கலும், எதிர்காலத்தில் இந்த திட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும் என்றும் இந்த போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலை வர் க.சண்முக சிகாமணி தலைமை தாங்கி னார். மாவட்டத் துணைத் தலைவர் என்.சீதாபதி வரவேற்றார். மாவட்ட செய லாளர் கி.கொளஞ்சி கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஓய்வு பெற்ற சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.நடராஜன் துவக்கி வைத்து பேசினார்.மாநில துணைத்தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினார். அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்ட மைப்பின் தலைவர் தி. புருஷோத்தமன், செயலாளர் என்.காசிநாதன், மாவட்ட தலைவர் எம்.மனோகரன், குடியிருப்போர் சங்கத்தின் சிறப்பு தலைவர்  எம்.மருதவாணன், தலைவர் பி.வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பேசினர். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.