‘சேகோ சர்’ ஆலையை ஏற்படுத்துக விவசாயிகள் சங்க மாநாடு கோரிக்கை
கள்ளக்குறிச்சி,செப்.24- மரவள்ளிக்கிழங்கு சாகுபடி விவசாயிகளை பாதுகாக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘சேகோ சர்’ தொழிற்சாலையை துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சங்கராபுரம் 17வது ஒன்றிய மாநாடு துணைத் தலைவர் எஸ்.கோவிந்தன் தலைமையில் நடை பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி துவக்கி வைத்தார். செய லாளர் ஜி.மணிமாறன் வேலை அறிக்கையையும் சமர்பித்தார். பொருளாளர் ஈ.ராம்குமார் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பி த்தனர். மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை, பொரு ளாளர் எம்.சி.ஆறுமுகம், சி.சசி குமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு தலைவராக எஸ்.கோவிந்தன், செயலாளராக ஜி.மணிமாறன், பொரு ளாளராக இ.ராம்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி) சட்டமாக்க வேண்டும். சங்கராபுரம் ஒன்றியத்தில் பல ஆண்டு களாக பயிரிட்டு அனுபவம் செய்து வரும் விவசாய நிலங்களுக்கு வகைமாற்றம் செய்து விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும். விவசாயி களுக்கு அரசு வழங்கும் மானிய திட்டங்களில் பயனாளிகள் தேர்வு செய்வதில் ஊழல் முறைகேடு இன்றி உண்மை யான பயனாளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கரும்பு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு நியாய மான கொள்முதல் விலை நிர்ணயித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன.